வதந்திகள் குறித்து வருத்தம் தெரிவிக்கும் வாட்ஸ்அப் நிறுவனம்! "Whatsapp" - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 7, 2018

demo-image

வதந்திகள் குறித்து வருத்தம் தெரிவிக்கும் வாட்ஸ்அப் நிறுவனம்! "Whatsapp"

வதந்திகள் குறித்து வருத்தம் தெரிவிக்கும் வாட்ஸ்அப்

 நிறுவனம்! "Whatsapp"


போலியான செய்திகளை, தவறான செய்திகளை, வதந்திகளை பரவ விடாமல் தடுக்கத் தேவையான வழிமுறைகளை யோசித்து வருகிறோம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
16_06491
இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவை நம் வாழ்க்கைக்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டன. இவைகள் மூலம் ஏராளமான தகவல்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. அதில் தவறான தகவல்களும் பரப்பப்படுவதும் உண்டு. தவறான வதந்திகள் பற்றி மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கடிதம் அனுப்பியிருந்தது. அதில், 'வாட்ஸ்அப் பொதுமக்களிடையே சட்டம், ஒழுங்கு, மத நல்லிணக்கம் குலைவதை அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பான வழிமுறைகளை வாட்ஸ் அப் அமல்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் விளக்கம் அளித்துள்ளது. அதில், `வாட்ஸ்அப் மூலம் வதந்திகள், போலியான செய்திகள் பரவுவதை கேள்விப்பட்டு தங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வதந்திகளைக் கண்டறிய உரிய முறையில் திட்டமிடப்படும். 
போலியான செய்திகளை, தவறான செய்திகளை, வதந்திகளைப் பரவ விடாமல் தடுக்க தேவையான வழிமுறைகளை வாட்ஸ்அப் யோசித்து வருகிறது. அதில் முக்கியமானது ஒரு செய்தியை யார் பார்வர்ட் செய்கிறார் என்பதை கண்காணிப்பது. யாரிடமிருந்து அந்த செய்தி வந்தது என்ற விவரங்களை இதன் மூலம் அறிய முடியும். இது மிகப் பெரிய சவால். இதற்கு அரசாங்கம், பொதுமக்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சமீபத்தில் குரூப் சாட்டுகளில் தேவையில்லாத செய்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் போதிய மாற்றங்கள் செய்யப்பட்டன. குரூப்பை விட்டு வெளியேறியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாத வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோல சில உத்திகளை அமல்படுத்தி வருகிறோம். இதெல்லாம் வதந்திகள், தவறான செய்திகள் பரவுவதை ஓரளவு தடுக்க உதவும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கியுள்ளது.

Followers

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages