தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியான சாமி 2, ராஜா ரங்குஸ்கி
நடிகர் விக்ரம் நடிப்பில் நேற்று வெளியான சாமி 2 மற்றும் ராஜா ரங்குஸ்கி திரைப்படங்கள் திரைக்கு வந்த முதல் நாளே தமிழ் ராக்கஸ் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீமராஜாவைத் தொடர்ந்து சாமி 2 மற்றும் ராஜா ரங்குஸ்கி திரைப்படங்கள் திரைக்கு வந்த முதல் நாளே தமிழ் ராக்கஸ் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விக்ரம், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் நேற்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் வெளிநாடுகளில் சாமி 2 திரைப்படம் திரைக்கு வந்தது. விக்ரமுடன் பாபி சிம்ஹா, பிரபு, ஜான் விஜய், ஓ.ஏ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் ஆகியோர் நடித்துள்ளனர். திரைக்கு வந்த முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் தங்களது இணையத்தில் இந்தப் படத்தை வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து நேற்று வெளியான மற்றொரு படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தை தரணிதரன் இயக்கியுள்ளார். நடிகர் சிரிஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் சாந்தினி ஜெயகுமார் நாயகியாக நடித்துள்ளார். இது ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் நேற்று தங்களது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
சீமராஜா படத்தைப் போல இந்த இரண்டு படங்களும் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தப் படங்களின் பிரின்ட்டைப் பார்க்கும்போது, தியேட்டரில் திருடப்பட்ட படங்களாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment