‘மௌனராக’த்துக்கு ஓகே. இந்த ‘ஓகே கண்மணி’ காலத்துக்கு ஓகேவா? மிஸ்டர்.சந்திரமௌலி விமர்சனம் - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 7, 2018

‘மௌனராக’த்துக்கு ஓகே. இந்த ‘ஓகே கண்மணி’ காலத்துக்கு ஓகேவா? மிஸ்டர்.சந்திரமௌலி விமர்சனம்

‘மௌனராக’த்துக்கு ஓகே.

 இந்த ‘ஓகே கண்மணி’ 

காலத்துக்கு ஓகேவா? மிஸ்டர்.சந்திரமௌலி 

விமர்சனம்

#MrChandramouli


இரு கால் டாக்ஸி நிறுவனங்களுக்கிடயே நடக்கும் தொழில் விரோதத்தில், விதியால் சிக்கி பல விளைவுகளைச் சந்திக்கிறது ஒரு சாதாரண குடும்பம். இதுதான் `மிஸ்டர். சந்திரமௌலி' படத்தின் ஒருவரிக் கதை.

‘மௌனராக’த்துக்கு ஓகே. இந்த ‘ஓகே கண்மணி’ காலத்துக்கு ஓகேவா? மிஸ்டர்.சந்திரமௌலி விமர்சனம் #MrChandramouli‘சிறந்த கால் டாக்ஸி நிறுவனம்' என்ற விருதைப் பல வருடங்களாக பெற்றுவரும் 'கருடா கால் டாக்ஸி' நிறுவனத்தின் உரிமையாளர் அழகரிடம் (இயக்குநர் மகேந்திரன்) அதே துறையில் புதிதாக கால் பதித்திருக்கும் 'கோ கேப்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் விநாயக் (சந்தோஷ் பிரதாப்), 'அடுத்த வருடம் அந்த விருதை உங்கள் கையாலேயே நான் பெறுவேன்’ என்று சவால் விடுகிறார். 'நேத்து வந்த நீயெல்லாம் என்னை எதிர்க்கிற' என்று தனக்குள் கோபமாகிறார் அழகர். 
மிஸ்டர்.  சந்திரமௌலி
அதன் பிறகு சில கொடூரக் குற்றங்கள் நகருக்குள் நடக்க, ஒட்டுமொத்த சென்னையுமே பரபரப்பாகிறது. மறுபக்கம், வங்கி ஊழியர் சந்திரமௌலியும் அவரின் மகன் ராகவ்வும் தாங்கள் உண்டு தங்களது பத்மினி கார் உண்டு என நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த கால் டாக்ஸி கதையும் இந்தப் பத்மினி கார் கதையும் ஒரு புள்ளியில் எசகுபிசகாய் பிணைய, அடுத்தடுத்து பிரச்னைகளாய் நகர்கிறது கதை. இறுதியில் என்ன ஆனது என்பதே `மிஸ்டர் சந்திரமௌலி'.
மிஸ்டர்  சந்திரமௌலி
‘பாக்சர்’ ராகவாக கௌதம் கார்த்திக். இதற்கு முன் பல ஜானர் படங்களில் கதகளி ஆடியவர், இதற்கு முன்னால் வந்தப் படங்களில் என்ன செய்தாரோ அதையேத்தான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார், தவறான கதைத் தேர்வு உட்பட. கார்த்திக்குக்கு 'மௌன ராகம்' மனோகர்தான் காலத்தால் அழிக்க முடியாத கதாபாத்திரம். அலட்சியமான மாடுலேஷன், துறுதுறு நடிப்பு, நக்கல் சிரிப்பு... இதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் ட்ரேட் மார்க். அந்த மனோகரையே இந்த சந்திரமௌலியிலும் கலர் ஜெராக்ஸ் அடிக்க நினைத்து, நம்மை அடிஅடியென அடித்திருக்கிறார் கார்த்திக். அது `மௌனராகம்' காலத்துக்கு ஓகே, இந்த `ஓகே கண்மணி' காலத்துக்கு செட் ஆகலை சாரே!

#MrChandramouli

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages