பிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே! - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 7, 2018

demo-image

பிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே!

பிக்பாஸ்.. இவ்ளோ பாசக்காரங்களை டார்ச்சர் பண்றியே! 

#BiggBossTamil2

130053_thumb

நீருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குமான பந்தம் இன்னமும் விடாது போலிருக்கிறது. நேற்று தண்ணீரை வைத்து விளையாடிய பிக்பாஸ் இன்று போட்டியாளர்களின் கண்ணீரை வைத்து விளையாடினார். ‘எந்தவொரு நபரின் பிரிவினால் தாங்கள் அதிகம் துயருகிறோம்?’ என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும். இந்தப் பகுதியின் மூலம் போட்டியாளர்களின் இன்னொரு முகங்களை அறிய முடிந்தது. ‘பாசக்காரப் பயலுவளா’ இருக்கிறார்கள். குறிப்பாக டேனி, ரித்விகா போன்றவர்களின் பேச்சுக்கள் உருக்கமாக இருந்தன. 
1_08078
இதன் மூலம் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் அதிகம் புரிந்து கொள்ளவும் ஒருவரையொருவர் ஆறுதலாக அணைத்துக் கொள்ளவும் இந்தப் பகுதி நிச்சயம் உபயோகமாக இருக்கும். காலையில் சென்றாயனிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்ட மஹத், இந்தப் பகுதி முடிந்ததும் ‘மன்னிச்சிர்ரா சென்றயான்’ என்று தானாக முன்வந்து சொன்னது ஒரு நல்ல உதாரணம். ஆத்மார்த்தமான இரண்டு துளி கண்ணீரால் பல வருட மனக்கசப்பை ஒரு நொடியில் கழுவி விட முடியும் என்பதை நிரூபித்தது இந்தப் பகுதி. 
காலையில் சண்டை, மாலையில் நெகிழ்ச்சி என்று சமநிலையுடன் காணப்பட்டது பிக்பாஸ் வீடு. 
‘சுப்பம்மா.. சுப்பம்மா..’ என்கிற குத்துப்பாடலுடன் பிக்பாஸ் வீடு எழுந்தது. (இதுவே எங்கள் வீடாக இருந்தால், ‘கருமம் பிடிச்சவனே…காலைல.. ஏதாவது நல்ல சாமிப்பாட்டா போடக்கூடாதா?’ என்று என் அம்மா திட்டுவார்). இந்தப் பாடலுக்கு மும்தாஜூம் நித்யாவும் ஏற்கெனவே நடனமாடியிருப்பதாலோ என்னமோ, நித்யா உற்சாகமாக ஆடினார். (இப்பல்லாம் ‘குட்மார்னிங் போஷிகா’ சொல்ல மறந்துடறீங்க மேடம்).
முதல் சீஸனைப் போல் இந்த சீஸனில் ‘ஹோம் சிக்னஸ்’ துயரோடு காமிராவைப் பார்த்து அழுகிறவர்கள் குறைவு. இந்த வகையில் வையாபுரியை நினைவுப்படுத்தி அந்தக் குறையைப் போக்கினார் சென்றாயன். தன் மனைவி ‘கயல்விழி’ மற்றும் பெற்றோரை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். 

Followers

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages