அதிரடி ஆணை வெளியானது: சென்னை முழுவதும் போலிஸ் குவிப்பு! - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, July 29, 2018

அதிரடி ஆணை வெளியானது: சென்னை முழுவதும் போலிஸ் குவிப்பு!

அதிரடி ஆணை வெளியானது: சென்னை முழுவதும் போலிஸ் குவிப்பு!




தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நலம் குறித்து வதந்தி பரவுவதால், சென்னையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி முதுமையின் காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த, திமுக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு: இதற்கிடையே கருணாநிதி உடல்நலம் குறித்து சமூக ஊடகங்களில் கடந்த இரு நாள்களாக அவ்வப்போது வதந்தி பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அந்த மருத்துவமனையின் சார்பில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இருப்பினும் வதந்தியினால், சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் சட்டம் - ஒழுங்கை சீராக பராமரிப்பது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை செய்தார். இதில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது குறித்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக பொது இடங்களிலும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தயார் நிலையில் போலீஸார்: அதேநேரத்தில் எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில் காவலர்கள் தயார் நிலையில் இருக்கும்படியும், விடுமுறையில் இருக்கும் காவலர்கள் விரைவில் பணிக்கு திரும்பும்படியும் காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தவிர்க்க முடியாத நிலையில் உள்ள காவலர்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்குமாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர், பாதுகாப்புப் பிரிவு போலீஸார் உள்ளிட்ட அனைத்து பிரிவு போலீஸாரும் தயார் நிலையில் இருக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. My News Da.apk - 3.7 MB

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages