திடீரென நின்று போன இதயத் துடிப்பு… - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, July 31, 2018

demo-image

திடீரென நின்று போன இதயத் துடிப்பு…

திடீரென நின்று போன இதயத் துடிப்பு… பதறிய டாக்டர்கள்.. கதறிய குடும்பத்தினர்!

20180731_130039


உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமடைந்த  நிலையில் அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். நாடித்துடிப்பும் முற்றிலுமாக குறைந்த நிலையில் திடீரென அவர் நார்மல்  நிலைக்கு திரும்பியிருப்பது மருத்தவ அதிசயமாக பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனையில் நடந்த இந்த அதிசயம் தான் கருணாநிதி குறித்து அரசியல் தலைவர்களை பேச வைத்துள்ளது.

வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அரசியலை விட்டு ஒதுங்கி கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் கருணாநிதி. சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த 4 மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
20180731_125852


இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கருணாநிதியின் உடல் சற்று பின்னடைவு ஆனதும் அவர் காவேரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் சீராக பராமரித்து வந்தனர்.

இந்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு 5 முதல் 7 நிமிடங்களுக்கு அவரது இதயம்  திடீரென நின்றுவிட்டதாகவும், அதற்கு முன்பு அவரது நாடித்துடிப்பு 20 முதல் 30 அளவுக்கும், ரத்த அழுத்தம் 40/ 60 என்ற அளவிலும் குறைந்தது.

பயந்து போன அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு, கனிமொழி, அமிர்தம் உள்ளிட்ட, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், கருணாநிதியின் படுக்கையை சுற்றி நின்று, துயரம் தாங்காமல் அழுதனர். பின், குடும்பத்தினர் அனைவரும், கருணாநிதியின் காலை தொட்டு வணங்கினர்.


அதே நேரத்தில் அதிர்ந்து போன காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சினிமா பாணியில் உடனடியாக இதயத்தை  மசாஜ் செய்துள்ளனர். அப்போது தான் அந்த அதிசயம் நடந்துள்ளது. நின்று போன இதயம் மீண்டும் இயங்கத் தொடங்கியதாம். செயலற்று கிடந்த கருணாநிதியின் உடலில், திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தலை, கை, கால்களை, லேசாக அசைக்கத் தொடங்கியுள்ளார்..

மேலும் ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவுக்கும் நாடித் துடிப்பு 40 ற்கும் மேலும் உயர்ந்துள்ளது.  இதையடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் கருணாநிதியின் உடல் நிலை சீரடைந்தது. இதை காவேரி டாக்டர்கள் ஒரு மருத்துவ அதிசயமாவே பார்க்கின்றனர்.


உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், அவருக்கு தற்போது உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடலில் பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகள், சீராக இயங்குவதற்கு தேவையான சிறப்பு மருந்துகளும், ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.

அந்த மருந்துகள், 48 மணி நேரம் வரை சீராக இயங்க வைக்கும் என்றும், அதன்பின், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, தொடர் சிகிச்சை அளிக்கவும், டாக்டர்கள் குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அரை மணி நேரம்தான் தமிழகத்தையே பதற வைத்தது. கருணாநிதியின் வில் பவர்தான் அவரைக் காப்பாற்றியுள்ளது என அரசியல் கட்சித் தலைவர்களும், பொது மக்களும் பேசி வருகிறார்கள்.

Followers

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages