ஹாப்பி பர்த்டே தோனி: 37-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் மகேந்திர சிங் தோனி - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 7, 2018

ஹாப்பி பர்த்டே தோனி: 37-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் மகேந்திர சிங் தோனி

ஹாப்பி பர்த்டே தோனி: 37-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் மகேந்திர சிங் தோனி

ஹாப்பி பர்த்டே தோனி: 37-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் மகேந்திர சிங் தோனி









புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும், வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவருமான மகேந்திர சிங் தோனி  இன்று தனது 37-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் பான் சிங்,  தேவகி தம்பதியினருக்கு 1981-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி மகேந்திர சிங் தோனி பிறந்தார். ஜவஹர் வித்யாலயாவில் தனது பள்ளிப் படிப்பை தொடங்கிய அவருக்கு, முழு கவனமெல்லாம் விளையாட்டின் மீதுதான் இருந்தது.

அந்தப் பள்ளியின் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தோனி, அடுத்தடுத்து உள்ளூர், மாவட்ட அளவிலான போட்டிகளில் அசத்தியதால், பீகார் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு மத்திய அரசு வேலையும் அவருக்கு தேடி வந்தது. ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். விக்கெட் கீப்பராகி கேட்ச் பிடிக்க வேண்டியவரை இப்படி ரயிலில் டிக்கெட் இல்லாமல் வருபவர்களை பிடிக்க வைத்து விட்டார்களே என்று தோனி தனது விதியை நொந்து கொண்டிருந்தார்.

ஒருகட்டத்தில் கிரிக்கெட் பயிற்சிக்காக விடுப்பெடுக்க ஆரம்பித்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு ரயில்வே நிர்வாகம் அவருக்கு  நோட்டீஸ் அனுப்பியது. அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. விளைவு அவரது வேலை பறிபோனது. அவரது எதிர்காலம் குறித்த கேள்விக்குறி ஆச்சர்யக்குறியாக மாற, அதிக காலம் பிடிக்கவில்லை. 2004-ஆம் ஆண்டு செப்டம்பரில், 'இந்தியா ஏ' அணியின் விக்கெட் கீப்பராக தோனிக்கு வாய்ப்பு கிடைத்தது. 'ஜிம்பாப்வே 11' அணியுடனான முதல் போட்டியிலேயே ஒட்டுமொத்தமாக 7 கேட்ச், 4 ஸ்டம்ப்பிங் என அசத்திய தோனி, அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் கலக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனம் இந்த துடிப்பான இளைஞரின் பக்கம் திரும்பியது.

அடுத்தடுத்த போட்டிகளிலும் தோனியின் ரன் வேட்டை தொடரவே 2006-ஆம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில் அவருக்கு முதலிடம் கிடைத்தது. 2007-ஆம் ஆண்டில் முதன்முறையாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனியர் வீரர்கள் ஒதுங்க தோனியை கேப்டனாக நியமிக்க சிபாரிசு செய்தார் சச்சின் டெண்டுல்கர். தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்தப் போட்டியில் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தது. செப்டம்பர் 24-இல் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது.

கபில்தேவிற்கு பிறகு உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன் என தோனியை இந்தியா கொண்டாடியது. 2007-ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியும், 2008-இல் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பதவியும் தோனியைத் தேடி வந்தன. 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை இந்தியா- இலங்கை  வங்கதேசம் இணைந்து நடத்தியது. இந்த முறையாவது கோப்பையை வசப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணி தட்டுத்தடுமாறி காலிறுதிக்குள் கால் பதித்தது.

2003-இல் உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்விக்கு பழி தீர்த்து அரையிறுதியில் பாகிஸ்தானை துவம்சம் செய்தது. மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்த இந்திய அணி கம்பீர், யுவராஜ், தோனியின் நேர்த்தியான ஆட்டத்தால் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

ஒருநாள், டெஸ்ட் மட்டுமல்லாது டி-20 போட்டிகளிலும் தோனி வெற்றி நாயகனாகவே திகழ்ந்தார். 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் போட்டியில் களமிறங்கியபோது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தன் மீதான விமர்சனங்கள் அனைத்திற்கும் வெற்றியின் மூலம் மட்டுமே பதில் சொல்லும் தோனி, 3-ஆவது முறையாக சி.எஸ்.கே.வுக்கு கோப்பையை வென்று தந்தார்.

மகேந்திர சிங் தோனி.... இந்த பெயருக்கு பின்னால் உள்ள சாதனைகளும், சறுக்கல்களும், விமர்சனங்களும், சர்ச்சைகளும் பற்பல. தோனி உழைப்பால் உருவான வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages