கூகுள் குரோம் பிரெளசிங் ஹிஸ்ட்ரி பாதுகாப்பாக இருக்கின்றதா.?


ஹேக்கர்கள் மிக சுலபமாக அடைவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.! கூகுள் குரோம் கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் பிரெளசர்களில் உள்ள எக்ஸ்டென்சன்கள் 1.8 மில்லியன் நபர்களின் ஹிஸ்ட்ரியை ஹேக் செய்ய உதவியாய் இருந்துள்ளது. இந்த ஹேக் செய்யப்பட்ட டேட்டாக்கள் ஹேக்கர்கள் மற்றும் பிளாக்மெயிலர்களிடம் கிடைத்தால் பல விபரீதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிஸ்ட்ரி பறிபோகும் வாய்ப்பு அதிகம் கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் பிரெளசர்கள் ஹிஸ்ட்ரியில் இருந்து டேட்டாக்கள்

திருடப்படுவதை சான்பிராசிஸ்கோவை சேர்ந்த ராபர்ட் தியட்டான் என்ற சாப்ட்வேர் எஞ்சினியர் கண்டுபிடித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்தே இது நடந்து வருவதாகவும் அவர் கண்டுபிடித்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ஸ்டைலிஷ் என்ற எக்ஸ்டென்ஷனை எடுத்து கொள்ளும்படும்படி ஒரு அழைப்பு வரும் அதனை நாம் ஏற்றுக்கொண்டால் நம்முடைய ஹிஸ்ட்ரி பறிபோகும் வாய்ப்பு அதிகம் என்பதை கண்டுபிடித்துள்ளார். கூகுள் சியர்ச்சிலும் வரும் இந்த ஸ்டைலிஷ் சாப்ட்வேர் மற்றும் இதனுடன் இணைந்து சிமிலர்வெப் ஹிஸ்ட்ரியில் உள்ள டேட்டாக்களை எடுத்து ஹேக்கர்களுக்கு அளிப்பதில் பெரும் பங்கு
வகிக்கின்றது. இந்த ஸ்டைலிஷ் நமது ஹிஸ்ட்ரி முழுவதையும் எடுத்து பரிமாறி கொள்வது மட்டுமின்றி கூகுள் சியர்ச்சிலும் வரும் ஆபத்தையும் உண்டாக்குகிறது டெக்ஸ்ட் ஃபைல்களுடன் எளிதாக இணைக்க முடியும். ஸ்டைலிஷின் புதிய உரிமையாளரான செமிவெப், ஒரு தனிப்பட்ட நபரின் ஆன்லைன் செயல்பாடுகளை மற்றவர்களுடன் இணைக்க அனுமதிக்கிறது. மேலும் Userstyles.org என்ற இணையதளத்தில் ஒரு ஸ்டைலிஷ் கணக்கை உருவாக்கியவர்கள் தனித்துவமான அடையாளங்களை
கொண்டிருப்பார்கள், பயனர்கள் ஒரு வலைத்தளத்தை விரைவாகவும் திறமையாகவும் அணுக உதவும் ஒரு குக்கி மற்றும் டெக்ஸ்ட் ஃபைல்களுடன் எளிதாக இணைக்க முடியும். இமெயில் விபரங்களும் வெளியே கசியும் இதன் பொருள் என்னவென்றால், எந்தவொரு பயனரின் முழுமையான பிரெளசிங் ஹிஸ்ட்ரியின் ஒரு காப்பியை அனுப்புவது மட்டுமின்றி அவருடைய மற்ற டேட்டாக்களும், இமெயில் விபரங்களும் வெளியே கசியும் ஆபத்டு உள்ளது. 2017 ஆம் ஆண்டில் இதே போன்ற வலையிலிருந்து வந்த ஒரு அறிக்கையின்படி, நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையை எடுத்துக்கொள்வதன் மூலம், அதன் மேம்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்டபோது, பிரெளசர்களின் நீட்டிப்பை மேம்படுத்துவதற்கு டிராக்கிங் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் பயனர்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது தேவையில்லாத எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் ஆட்-ஆன்ஸ்களை பயன்படுத்த வேண்டாம் என்பதுதான்.
No comments:
Post a Comment