சேலத்தில் லேசான நில அதிர்வு! - பீதியடைந்த பொதுமக்கள் - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 21, 2018

சேலத்தில் லேசான நில அதிர்வு! - பீதியடைந்த பொதுமக்கள்

சேலத்தில் லேசான நில அதிர்வு! - பீதியடைந்த பொதுமக்கள்




நில அதிர்வு
சேலம் மாவட்டத்தில் இன்று காலை பல பலகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஒவ்வொருவரும் நில அதிர்வை உணர்வை சொல்லி பதற்றமும், அச்சமும் அடைந்துள்ளனர். 
சேலம் மாநகராட்சியின் பல பகுதிகள், கொண்டலாம்பட்டி, காமலாபுரம், ஓமலூர், தாரமங்கலம், தீவட்டிப்பட்டி, பண்ணப்பட்டி,மேச்சேரி, ஏற்காடு போன்ற பல பகுதிகளில் இன்று காலை 7:55 மணி அளவில்  சில விநாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு சேலம் அம்மாப்பேட்டையில் தொடங்கி பென்னாகரம் வரை உள்ள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மேட்டூர் அணையில் தற்போது 116.98 அடிக்கு மேல் நீர் இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் நில அதிர்வை கணக்கீடு செய்யும் சிஸ்மோமீட்டர் பழுதடைந்து விட்டதால் நில அதிர்வு அளவு இன்னும் கணக்கிடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் ரிக்டர் அளவில் 3.3 ஆக நில அதிர்வு பதிவாகியிருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இதுப்பற்றி சட்டூரை சேர்ந்த வினோத், ''காலையில் காட்டில் வேலைச் செய்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு சத்தத்தோடு அதிர்வு ஏற்பட்டது. கொஞ்ச நேரத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அச்சத்தோடு நிமிர்ந்து என் அருகில் உள்ளவர்களை பார்த்தேன். அவர்களும் என்னை பார்த்தார்கல். அதன் பிறகு தான் நில அதிர்வு என்பதை உணர்ந்தோம்'' என்றார்.
இதுப்பற்றி நில அதிர்வு வல்லுநரிடம் விசாரித்த போது, '' சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் கீழ் அடுக்குப் பாறைகள் இருப்பதால் லேசான நில நடுக்கம் ஏற்படும். சேலம் நில அதிர்வில் 3வது இடத்தில் இருக்கிறது. ஆனால் பெரிய நில நடுக்கம் வர வாய்ப்பில்லை." எனத் தெரிவித்தார்,
இதற்கிடையே, நில அதிர்வு குறித்தது பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில அதிர்வால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொதுமக்கள் ஜன்னல், கதவுகள், பாலங்கள் அருகில் நிற்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages