''சிம்ரன், நயன்தாராவின் அந்த ஸ்பெஷல் குணம் - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 21, 2018

''சிம்ரன், நயன்தாராவின் அந்த ஸ்பெஷல் குணம்

''சிம்ரன், நயன்தாராவின் அந்த ஸ்பெஷல் குணம் த்ரிஷா

கிட்டயும் இருக்கு!'' - '96'

 இயக்குநர் பிரேம்





''சிம்ரன், நயன்தாராவின் அந்த ஸ்பெஷல் குணம் த்ரிஷாகிட்டயும்  இருக்கு!'' - '96' இயக்குநர் பிரேம்




`படத்தோட டீசர் வெளியானப்போ, விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரின் நடிப்பையும் ரசிகர்கள் கம்பேர் பண்ணி பேசுவாங்களேனு சின்னதா பயம் இருந்தது. ஏன்னா, ரெண்டுபேருமே நடிப்புல பெரிய ஜாம்பவான்கள்!.'' - என்கிறார், `96' படத்தின் இயக்குநர் பிரேம் குமார். படத்தின் டீசருக்கு இணையத்தில் அதிரிபுதிரி ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் நிலையில், பிரேம் குமாரிடம் பேசினேன்.  
த்ரிஷா
``விஜய்சேதுபதி, த்ரிஷா ரெண்டுபேருக்கும் இடையிலே அழகான கெமிஸ்ட்ரி படத்துல இருக்கும். அதை மட்டும் டீசர்ல சொல்லணும்னு ஆசைப்பட்டேன். அதனாலதான், வசனங்கள் இல்லாத டீஸரை ரிலீஸ் பண்ணேன். அவங்களுக்கிடையேயான அழகான சில உரையாடல்களை டிரெய்லர்ல பார்ப்பீங்க. அதுக்குத்தான் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். 
டீசருக்கு டியூன் பிடிக்க ரொம்பவே யோசிச்சிட்டு இருந்தோம். படத்தோட இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் பிஜிஎம் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்த சமயம். கேட்டதும் பிடிச்சுப்போன ட்யூனை, டீசருக்கு எடுத்துக்கிட்டோம். டீசர் வெளியான ஐந்தாவது நிமிடம் டைரக்டர் புஷ்கர் காயத்ரிக்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. பத்து நிமிடம் படத்தோட டீசரைப் பற்றி மட்டுமே என்கிட்ட பேசுனாங்க, சந்தோஷமா இருந்தது. ஆனா, புஷ்கர் - காயத்ரி பேசுனது மட்டும் என் மனசை விட்டுப் போகவே மாட்டேங்குது." 


``உண்மைக் கதையைத் தழுவுன இதுல விஜய்சேதுபதியோட கேரக்டருக்கு போட்டோகிராஃபர் ரோல் கொடுத்தது நீங்களும் ஒளிப்பதிவாளர் அப்படிங்குறதுனாலயா?''
``ஒரு லைஃப் ஸ்டைலை சொல்றதுக்கு எப்போவுமே ஒரு தொழில் தேவைப்படும். அதுக்காகதான் போட்டோகிராஃபர் லைஃப் ஸ்டைலே எடுத்துக்கிட்டேன். படத்துல விஜய்சேதுபதி டிராவல் போட்டோகிராஃபரா வருவார். இந்த வேலை அவ்வளவு ஈஸி கிடையாது. ஏன்னா, அவங்க குடும்பத்தை விட்டு எங்கையோ தூரமா ஒரு தனிமையில அவங்க வாழ்க்கையைக் கடந்துக்கிட்டு இருப்பாங்க. இப்படி இருக்குற நிறைய பேரை நானும் பார்த்திருக்கேன். ஸோ, எனக்கு நல்ல தெரிஞ்ச தொழிலை ஸ்க்ரீனில் காட்டுவோம்னு நினைச்சேன். முக்கியமா,நான் டிராவல் போட்டோகிராஃபர் கிடையாது. வைல்டு லைஃப் போட்டோகிராஃபரா வேலை பார்த்திருக்கேன். அதுக்குப் பிறகு சினிமாவுக்கு வந்துட்டேன்."
``வைல்டு லைஃப் போட்டோகிராஃபரில்உங்களுடைய குரு அல்போன்ஸ்ராய்கூட இன்னும் தொடர்பில இருக்கீங்களா?''
``கண்டிப்பா இருந்துதான் ஆகணும். ஏன்னா, அவருடைய வளர்ப்புப் பொண்ணைதான் நான் கல்யாணம் பண்ணியிருக்கேன். அவர் என்னுடைய மாமனார்தான். எங்க திருமணம் காதல் திருமணம். அல்போன்ஸ்ராய் சார் ரொம்பவே ப்ராட் மைண்டட். நிறைய வெளிநாட்டுக்காரர்கள்கூட வொர்க் பண்ணியிருக்கார். அதனால, எங்க திருமணத்துக்கு எதிர்ப்பு சொல்லலை.'' 
vijay sethupathi
``த்ரிஷா எப்படி நடிச்சிருக்காங்க?''
``நம்ம ஸ்கூல் படிக்கும்போது நம்முடைய ஸ்டாரா சினிமாவுல நடிக்குறவங்க இருப்பாங்க. நான் ஸ்கூல் முடிச்ச வருஷம் 96. அப்போ த்ரிஷா சினிமாவுக்கு நடிக்கவே வரலை. எனக்கு முப்பது வயசு இருக்கும்போது த்ரிஷா நடிச்ச `விண்ணைத்தாண்டி வருவாயா', `கீரிடம்' `என்னை அறிந்தால்' படத்தையெல்லாம் பார்த்தேன். ஏதோ ஒரு காந்தத் தன்மை த்ரிஷாகிட்ட இருந்தது. அதை முழுசா எந்த இயக்குநரும் இன்னும் வெளியே கொண்டுவரலனு தோணுச்சு.  
ரேவதி, சிம்ரன், நயன்தாரா மாதிரி த்ரிஷாகிட்டயும் ஸ்க்ரீனை ஆளுற திறன் இருக்கு. அதுதான் எனக்குப் பிடிச்சிருந்தது. அதனாலதான் இந்த கேரக்டர்ல த்ரிஷா நடிக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். வேற லெவல்ல நடிக்கக்கூடிய நடிகை த்ரிஷா. அது அவங்களுக்கே தெரியுமானு தெரியலை. ஒரு ஷாட் முடிச்சவுடனே, `சூப்பரா நடிச்சீங்க மேடம். எப்படி இந்த ரியாக்‌ஷன் கொண்டு வந்தீங்க'னு கேட்டா... `ஓ உங்களுக்குப் பிடிச்சிருந்துச்சா.. சந்தோஷம்'னு சொல்லிட்டு டப்புனு முடிச்சிருவாங்க. `96' படத்துல அவங்க பண்ணுனதுகூட ஒண்ணுமே இல்லை. இன்னும் நிறைய அவங்ககிட்ட இருக்கு. அதை எப்படிச் சொல்றதுனு எனக்குத் தெரியல. டையலாக் ஷீட்டை த்ரிஷா கையிலே கொடுத்தாலே போதும். டேக் சொல்லியாச்சுனா நடிச்சுக் கொடுத்துட்டுப் போயிக்கிட்டே இருப்பாங்க. சேதுவுக்கு டையால்க் ஷீட்டே தேவையில்ல. வாயால சொன்னாலே போதும். 
எனக்குத் தெரிஞ்ச மூணு பேருடைய கேரக்டரை வெச்சுதான் த்ரிஷா கேரக்டர் வடிவமைச்சேன். த்ரிஷாவுடைய காஸ்ட்டியூம்கூட, படத்துல வொர்க் பண்ணுன காஸ்ட்டியூம் டிசைனர் சுபஶ்ரீருடைய ரியல் லைஃப் டிரெஸ்தான். சுபஶ்ரீ எனக்கு ரொம்ப வருஷமா ஃப்ரெண்டு. ' படத்துல த்ரிஷாவுக்கு உன்ன மாதிரியே டிரெஸ் இருக்கணும். அதனால நீயே காஸ்ட்டியூம் டிசைனரா வொர்க் பண்ணு'னு சொல்லிதான் கூப்பிட்டு வந்தேன். படத்துல ரொம்ப எலிகென்ட்டா, சிம்பிளாதான் த்ரிஷாவுடைய காஸ்ட்டியூம் இருக்கும்.
``கும்பகோணத்தை கதை களமா ஏன் செலக்ட் பண்ணுனீங்க?''
``படம், ஒரே இரவுல நடக்குற கதை. ஆனா, எடுக்க எழுபது நாள் ஆச்சு. என்னோட சொந்த ஊர் தஞ்சாவூர். மொதல்ல நான் படிச்ச  ஸ்கூலேயே எடுக்கலாம்னுதான் முடிவு பண்ணேன். ஆனா, என்னோட ஸ்கூல் கொஞ்சம் மாடலா இருந்துச்சு. அதனால என்னோட தங்கச்சி படிச்ச ஸ்கூல்லே எடுத்திட்டேன். அது 150 வருஷம் பழைமையான ஸ்கூல். ஆனா, படத்தோட ஃப்ளாஷ்பேக் தஞ்சாவூர்ல நடக்குற மாதிரியிருக்கும். சில சீன்களை மட்டும் தஞ்சாவூர்ல எடுத்துட்டு மீதியை கும்பகோணத்துலேயே எடுத்திட்டேன்.
பிரேம் குமார் 96 
``சின்ன வயசு விஜய்சேதுபதியா, எம்.எஸ்.பாஸ்கருடைய பையன் நடிச்சிருக்கார்னு கேள்விப்பட்டோம்?''
``எம்.எஸ்.பாஸ்கருடைய பையன் ஆதி படத்துல நடிச்சிருக்கார். இப்போ அவருக்கு இருபது வயசு. ஹீரோ மெட்டீரியலுக்குத் தேவையான முகன் அவன்கிட்ட இருக்கும். அவ்வளோ ஹான்ஸமா இருப்பான். எம்.எஸ்.பாஸ்கர் சாருடைய குடும்ப போட்டோ புக்குல வந்திருச்சு. அதுல ஆதி போட்டோ பார்த்தோம். ஒரு சாயல்ல சேதுவோட முகம் மாதிரியே இருந்துச்சு. வரும்போதே கொஞ்சம் திமிரா `என்ன அண்ணா'னுதான் வந்தான். யாரை பார்த்தும் பயப்படலை. அவனைப் பார்த்துதான் நாங்கலாம் பயந்தோம். எதுக்குமே அசர மாட்டான். 
எனக்கு அவனைப் பார்க்கும் போதே விஜய்சேதுபதிதான் மைண்ட்ல வந்தார். ஏன்னா, விஜய்சேதுபதி எப்போவுமே தைரியாமா இருப்பார். அவரோட பழகுன பத்து வருஷத்துல நிறையப் பார்த்திருக்கேன். இந்தப் பையன் ஆதியும் அப்படித்தான். எம்.எஸ்.பாஸ்கர் சார்கிட்ட பையனை நடிக்க கேட்டப்போ உடனே ஓகே சொன்னார். நடிப்பைப் பற்றி நிறைய விஷயங்களை சொல்லி அனுப்பியிருந்தார். அதே மாதிரி த்ரிஷாவுடைய சின்ன வயசு கேரக்டருக்கு என்னோட காலேஜ் ப்ரெண்டு ஒருத்தருடைய அக்கா பொண்ணு கெளரி நடிச்சிருக்காங்க. படத்துல நடிகை தேவதர்ஷினி முக்கியமான ரோல் பண்ணியிருக்காங்க. அவங்க ரோல்ல காமெடி எதிர்பார்க்கலாம்.'' எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages