2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: அரசாணை வெளியீடு - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, July 6, 2018

2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: அரசாணை வெளியீடு

2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: அரசாணை வெளியீடு



சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2019 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று  முதல்வர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் ஜூன் 5-ம் தேதி அறிவித்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



உலக சுற்றுசூழல் தினமான ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் பிளாஸ்டிக் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதல்வா் பழனிசாமி சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுசூழல் மிகவும் பாதிப்டைகிறது.

Image result for ban plastic
இதனால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கால் நிலத்தடி நீா் பாதிக்கப்படுகிறது. விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு பாதிப்படைகின்றன. எனவே தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி வருகிற 2019 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் பாரம்பரிய முறையான வாழையிலை, பாக்கு மட்டைகளினாலான தட்டு, தாழம்பூ இலை, துணிப் பை உள்ளிட்டவற்றை பயன்படுத்த பழகிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages