கமலிடமே கலாட்டா... சென்றாயன் - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, July 21, 2018

கமலிடமே கலாட்டா... சென்றாயன்

கமலிடமே கலாட்டா... 

சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா! #BiggBossTamil



கமலிடமே கலாட்டா... சென்றாயன் ஆகிறார் கொத்து பரோட்டா! #BiggBossTamil
பிக்பாஸின் கடந்த சீஸனில் முழுமையாகவும் சரி, இந்த சீஸனில் இதுவரையும் சரி, இப்படி நடந்ததேயில்லை. வீட்டுக்குள் எத்தனை அடித்துக் கொண்டாலும் சனி, ஞாயிறுகளில் கமல் முன்னால் பள்ளிப்பிள்ளைகள் போல் அமர்வதுதான் போட்டியாளர்களின் வழக்கம். (சண்டையா?! அது எங்கேயாவது தூத்துக்குடியிலோ.. திருநெல்வேலியிலோதான் இருக்கும்!). ஆனால் இன்றைய தினம் நேர்மாறாக தாறுமாறுடன் அமைந்தது. ஒவ்வொருவருமே உணர்ச்சிப்பிழம்பமாக இருந்தார்கள். ‘உள்ள வராத.. இது ரத்த பூமி’ என்பதை கலவரம் செய்து  நிரூபித்தார்கள். 
‘நான் கேக்கறேன்.. பஞ்சாயத்தாடா..இது.. பஞ்சாயத்தே இல்ல.. மரியாதை இல்லாத இடத்துல எனக்கும் வேலையும் இல்ல” என்கிற தேவர் மகன் ‘சிவாஜி’ மாதிரி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கமல் கிளம்பி விடுமளவுக்கு இன்றைய தினம் ரணகளமாக இருந்தது. ஆனால் ஒன்று, ஒவ்வொருவரின் உணர்ச்சியிலும் எத்தனை உண்மை இருந்தது பாருங்கள்! நடிப்பிற்கும் அசலுக்கும் இதுதான் வித்தியாசம். இந்த துல்லியமான உணர்ச்சிகளை அவர்களால் படப்பிடிப்பில் தரவே முடியாது. 
கமல்
இந்தப் பஞ்சாயத்தில் பேசப்பட்ட சர்ச்சைகளைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம். 
‘ஒருவரின் ஆளுமையை தீர்மானிப்பதில், உருவாக்குவதில் அவர் படித்த கல்விக்கூடம் முக்கிய பங்கை வகிக்கிறது’ என்கிற உண்மையை பொன்னம்பலத்தின் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய முரட்டு முகத்தின் பின்னால் இருந்த, நாம் அறியாதிருந்த பின்னணியை அறிந்து கொள்ள முடிந்தது. ‘அப்பா..இல்ல.. அம்மா வரல.. நானேதான் போய் ஏவிஎம் செட்டியார் பள்ளிக்கூடத்துல போய் சேர்ந்தேன்’ என்று பொன்னம்பலம் சொன்னது உருக்கமானது. (‘எதிர்க்க இருந்த பள்ளிக்கூடத்துலதான் நான் படிச்சேன்’ என்றார் கமல் டைமிங்காக).  வணிக நோக்கமின்றி கல்விக்கூடங்கள் அமைவது அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆதாரமான சமூக விஷயம் என்று கமல் ஆதங்கப்பட்டதும் கலங்கியதும் உண்மையானது. 

பொன்னம்பலத்திடம் இரண்டு பிரச்னைகள் இருப்பதாகப் படுகிறது. ஒன்று, தலைமுறை இடைவெளி. இளையவர்கள் அடிக்கும் லூட்டிகளை பெரியவர்களால் சகித்துக் கொள்ளாமல் எரிச்சல் அடைவது. எனவேதான் ‘டேனி, யாஷிகா, ஐஸ்வர்யா’ ஆகியோரின் கூத்தும் கும்மாளமும் இவரை எரிச்சல் அடைய வைக்கின்றன. இன்னொன்று, தமிழ்நாடு, கலாசாரம், பண்பாடு என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி அற்ப விஷயங்களை ஊதிப்பெருக்குவது. இதுவும் தலைமுறை இடைவெளியின் இன்னொரு வடிவமே. இதில் ஆணாதிக்க உணர்வும் கலந்துள்ளது. “பொம்பளைங்க பொம்பளைங்களா இருக்கணும்” என்பது போன்ற திரைப்பட வசனங்களின் நடைமுறை பாத்திரங்கள் இவர்கள்.
பொன்னம்பலம்
தன்னருகே அமர்ந்திருந்த ஐஸ்வர்யா, தன் மேல் படும்படியாக கால் மேல் கால் போட்டுக் கொண்டிருந்தார் என்பது இவர் முன்வைக்கும் பிரச்னைகளுள் ஒன்று.  ‘தன் உடை காரணமாகவும் மிக முக்கியமாக காலில் அடிபட்டிருந்தாலும் அப்படி உட்கார நேர்ந்த காரணத்தை ஐஸ்வர்யா விளக்கியும் பொன்னம்பலத்தால் ஏற்க முடியவில்லை. கமல் சுட்டிக் காட்டியது போல் இதில் கலாசார பிரச்னையும் கலந்தே உள்ளது. கால்மேல் கால் போட்டு அமர்வது மேலை நாடுகளில் இயல்பான பழக்கம். ஆனால் இங்கு அது அவமரியாதையாக பார்க்கப்படுகிறது. 
ஒரு பழைய சம்பவம். கமல்ஹாசனின் ரசிகர்கள் கூட்டத்தில், கமலின் வேண்டுகோளுக்கிணங்க எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார். தன் இயல்புக்கேற்ப ஜெயகாந்தன் மேடையில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்த போது, ரசிகக் குஞ்சுகளில் ஒருவர் கோபப்பட்டு ‘என் தலைவன் முன்னாடியா கால் போட்டு உட்கார்ந்திருக்க? காலை கீழே போடு’ என்று கத்த, கமல் இதில் உடனே தலையிட்டு கூச்சல் போட்ட ரசிகரை அழைத்து கோபித்து ஜெயகாந்தனிடம் மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது. 
இன்னொன்று, ஒரு படப்பிடிப்பில் மூத்த முன்னணி நடிகர் ஒருவர் உள்ளே நுழையும் போது, அனைவரும் மரியாதை கலந்த பக்தியுடன் எழுந்து நிற்க, கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நடிகை சிலக் ஸ்மிதா, அப்படியே அமர்ந்திருந்தாராம். “ஏங்க இப்படி பண்ணீட்டீங்க?” என்று பிறகு ஒருவர் விசாரிக்கும் போது “நான் அணிந்திருந்த கவர்ச்சியான உடை விவகாரமாக இருந்தது. கால் மீது கால் போட்டு மறைத்துக் கொண்டிருந்தேன்’ என்று அவருடைய நோக்கில் சொல்லப்பட்ட காரணத்திலுள்ள நியாயம்  புரிந்து கொள்ளப்பட வேண்டியது. 
ஐஷ்வர்யா
‘இளம் வயதுகளில் நாமும் அப்படித்தானே ஜாலியாக இருந்தோம்” என்கிற நோக்கில் இளம் தலைமுறையினரின் மனவோட்டங்களைப் புரிந்து கொண்டு முதிர்ச்சியாக நடக்கும் பொறுப்பும் பெருந்தன்மையும் பெரியவர்களுக்கு வேண்டும். இளையவர்களிடம் நிதானமாக அவர்களின் பிரச்னைகளைச் சுட்டிக் காட்டினால் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். பலருக்கு இந்தப் பொறுமையும் முதிர்ச்சியும் இருப்பதில்லை. இதன் மறுமுனையில், பெரியவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை தவிர்ப்பதில் இளையவர்களின் பங்கும் இருக்கிறது. இதற்காக தங்களின் தனித்தன்மைகளில் இருந்து, இயல்புகளிலிருந்து அவர்கள் வெளியே வர வேண்டியதில்லை. “இது என் நேச்சர்” என்று ஐஸ்வர்யா பொங்குதவற்கும் இதுதான் காரணம். 
இப்படி பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதில்தான் ‘குடும்பம்’ என்கிற நிறுவனத்தின் அழகும் பெருமையும் இருக்கிறது. ஆனால் ‘பிக்பாஸ்’ வீடு செயற்கையாக உருவாக்கப்பட்ட, தற்காலிகமான வீடு என்பதால் ‘இவர் தங்களின் குடும்ப உறுப்பினர்’ என்கிற எண்ணம் அவர்களுக்குள் படியவில்லை. அப்படி உடனே படிந்து விடும் என்று எதிர்பார்க்கவும் முடியாதுதான் . ஆனால் – இவை சார்ந்த சகிப்புத்தன்மையோடு இந்த விளையாட்டை விளையாடுவதுதான் இதிலுள்ள அடிப்படை சவாலே. இது பலருக்குப் புரியவில்லை. தங்களின் செளகரிய எல்லைகளில் இருந்து இறங்கி வரும் சகிப்புத்தன்மை இங்கு பலருக்கு இல்லை. 
தமிழ்நாடு, கலாசாரம் என்று தொடர்ந்து பேசும் பொன்னம்பலம் அதற்கு முன்னுதாரணமாகவும் இல்லை. பெண்கள் குறித்து கொச்சையாக பேசுவது, இளையவர்களின் பிழைகளை கோபத்துடன் சுட்டிக்காட்டுவது, இது குறித்து தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டும் புறம்பேசிக் கொண்டும் இருப்பது’ என்று எதிர்மறையான விஷயங்களை பின்பற்றிக் கொண்டிருக்கிறார். இதுவா தமிழ் கலாசாரம்? ‘வந்தாரை வாழ வைப்பதும்’ தமிழ் கலாசாரம்தான்’ என்பதை ‘பொன்னம்பலம்’ போன்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 
பிக்பாஸ்
**
எளிமையான உருவம் மற்றும் பின்னணி காரணமாக இந்த வீட்டில் சென்றாயன் பல்வேறு விதங்களில், பல சமயங்களில் சிறுமைப்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். இத்தனைக்கும் எடிட் செய்யப்பட்ட, நாம் காணும் சுருக்கமான காட்சிகளிலேயே இதனை உணர முடிகிறது என்றால் 24 மணி நேரத்தில் அவர் என்ன பாடுபடுகிறார் என்பதை நன்றாகவே யூகிக்க முடிகிறது. (பாலாஜி சென்றாயன் குறித்து செய்யும் மிகையான கிண்டல்களை டேனி குறிப்பிட்டது ஓர் உதாரணம்). 
ஆனால் சென்றாயன் இன்று குறிப்பிட்டது அவருக்கு வலு சேர்க்கும் காரணமாக அமையவில்லை அவருக்கு ஏற்பட்டிருந்த பல அழுத்தங்கள் இந்தப் புள்ளியில் வந்து வெடித்தது என்பதாகவே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 
நீச்சல் குளத்தில் சென்றாயனின் மூக்குச்சளி விழுந்ததால் அருவருப்படைந்து விலகினோம் என்று மற்றவர்கள் சொல்வதை ஒருவகையில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ‘எளியவர்களின் சார்பாக பேசுகிறோம்’ என்று இதை பூசி மெழுக முடியாது. (‘பயங்கரமான quantity’ என்ற வைஷ்ணவி போல் மிகைப்படுத்தவும் தேவையில்லை). நம் வீடுகளில், நம் நெருங்கிய உறவுகளிடம் இருந்து வெளிப்படும் இம்மாதிரியான விஷயங்களுக்கு நாம் தன்னிச்சையாக அருவருப்படைவோம் என்பதுதான் நிஜம் மற்றும் யதார்த்தம். ஆனால் அவர்கள் உறவுகள் என்பதால் மிதமான கோபத்தை வெளிப்படுத்துவோம். அந்நியர்கள் என்றால் வெளிப்படையான அருவருப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்துவோம். இதுதான் சென்றாயன் விஷயத்திலும் நடந்ததாக எடுத்துக் கொள்ளலாம். ‘மஹத் தன்னை தலைகீழாக தள்ளி விட்டதால்தான் அப்படி நடந்தது’ என்று சொன்ன சென்றாயனின் தரப்பையும் கவனிக்க வேண்டும். 
மஹத்
இதில் சென்றாயனின் தவறு ஏதுமில்லை. மேலும் இது இயல்பாக கடந்திருக்க வேண்டிய பிரச்னைதான். ‘நியாயமாகவே இருந்தாலும் கூட தம் செயலால் ஒருவர் ஆழமாக புண்பட்டிருக்கிறார்’ என்றால் அவரிடம் மன்னிப்பு கேட்பதுதான் நாகரிகம். அந்தச் சபையில் இதற்காக சென்றாயனிடம்  மற்றவர்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் அவர்களின் முதிர்ச்சி வெளிப்பட்டிருக்கும். 
கமல் சொன்னது போல நதிக்கரை நாகரிகத்தில் பல்வேறு அழுக்குகளுடன் கலந்துதான் சில விஷயங்கள் நமக்கு கிடைக்கின்றன. எவ்வித பொறுப்பும் இல்லாமல் இயற்கையை மாசுபடுத்தும் மனிதகுலம்தான் இதற்கு பிரதான காரணம். சில விஷயங்களை நேரடியாக கண்டால் நம்மால் அதை நுகரவே முடியாது. உதாரணத்துக்கு பல ஹோட்டல்களின் சமையல் கூடங்களைச் சொல்ல முடியும்.
கமல்
அடிப்படை விஷயங்களில் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம்தான். ஆனால் மிகையான சுத்தத்தை எதிர்பார்த்தால் வாழ்க்கையே நரகமாகி விடும். தங்களின் செளகரிய எல்லைக்குள் வெளியே வரும் போது இவர்களைப் போன்றவர்கள் தவிக்க வேண்டியிருக்கும். ஆனால் இதற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. ‘எல்லாவற்றிலும் சுத்தம் பார்ப்பது’ என்கிற பாவனையும் ஒரு மேட்டிமைத்தனமே. ‘நான் ஆச்சாரமாக இருக்கிறேன்’ என்று காட்டிக் கொள்வதின் மூலம் சக மனிதனை விட நான் உயர்ந்தவன்’ என்கிற ஆபத்தான செய்தியும் இதனுள் ஒளிந்திருக்கிறது. பல்லாண்டு கால சமூகப்படி நிலைகளின், பாரபட்சங்களின் ஊற்றுக்கண்களில் மேட்டிமைத்தன்மையும் ஒரு காரணமாக இருக்கிறது.  எனவே இது சார்ந்த சமநிலையும் சகிப்புத்தன்மையும், மிக குறிப்பாக இன்னொருவர் புண்படும் படி நடந்து கொள்ளக்கூடாது என்கிற முதிர்ச்சியும் தேவைப்படுகிறது. 
இன்னொன்று, குழந்தைகள் மற்றும் நோயாளிகளின் அசுத்தங்களுக்கும் தவறான பழக்கத்தின் காரணமாக பெரியவர்கள் தன்னிச்சையாக செய்யும் அசுத்தங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. (சாலையில் முன்னால் செல்லும் ஒருவர் ‘கர்… ரென்ற சதத்தத்துடன் மூக்கைச் சிந்தி சளியை எறிந்தால் நிச்சயம் அருவருப்பாகத்தான் இருக்கும். அது ஆரோக்கிய கேடும் கூட). 

அடுத்தது, ‘டேனி’ கடைந்தெடுக்கப்பட்ட விவகாரம். இந்த சீஸனின் வலுவான, இறுதி வரைக்கும் வரக்கூடிய போட்டியாளர் என்று டேனியை கணிக்க முடிகிறது. அவருடைய வயதுக்கேற்ற விளையாட்டுத்தனங்களையும் தாண்டி, பல விஷயங்களை மிக முதிர்ச்சியாக கையாள்கிறார். ஒரு சர்ச்சையை அதிகம் பெரிதாக்காமல் இயல்பாக அவர் கட்டுப்படுத்த முனைவது பல சமயங்களில் கவர்கிறது. அவர் திறமையான போட்டியாளராக இருப்பதாலேயே பலரின் பகைமைகளைச் சந்திப்பது தவிர்க்க முடியாததாகிறது. 
டேனியல்
குறிப்பாக பாலாஜியைச் சொல்லலாம். டேனியுடன் நேரடியாக மோத முடியாத பாலாஜி, மஹத் மற்றும் ஷாரிக் போன்ற பலியாடுகளின் மூலமாக தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்று தோன்றுகிறது. பொன்னம்பலத்திடம் இருப்பது தலைமுறை இடைவெளி பிரச்னைதான். ‘நல்ல குதிரைகளை டேனி கெடுக்கிறார்’ என்று பொன்னம்பலம் பாவனையாக கவலைப்படுவதற்கு காரணம், யாஷிகா, ஐஸ்வர்யா மீதுள்ள அக்கறையால் அல்ல. டேனி மற்றும் இளையதலைமுறை  மீதான பொதுவான எரிச்சலே என்று யூகிக்கத் தோன்றுகிறது. இது பல முதியவர்களிடம் உள்ள பிரச்னை.
தான் உரக்க பேசுவதும், கிண்டல் செய்வதும் சிலரைப் புண்படுத்துகிறது, அசெளகரியமாக்குகிறது என்றால் தன்னுடைய இயல்பு கெடாமல் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வதுதான் டேனியின் சரியான எதிர்வினையாக இருக்க முடியும். ஒரு பிரச்னையை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசாமல் சமயங்களில் புறம் பேசுவது டேனியிடம் உள்ள பலவீனங்களுள் ஒன்று. 
வைஷ்ணவி
ஒரு கூட்டத்தில் குழு அமைவது என்பது தன்னிச்சையானதொன்று. எதைக் கொண்டும் அதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. இந்த நோக்கில் பிக்பாஸ் வீட்டில் அமைந்திருக்கும் குழு என்பது முதியதலைமுறை x இளைய தலைமுறை என்கிற வகையில் அமைந்திருப்பதை காண முடிகிறது. தோற்றம், வர்க்கம், கலாசாரம் போன்ற வகையில் அமைந்த பிரிவுகளும் இடையில் கலந்துள்ளன. 
**
கமலின் பஞ்சாயத்து தோல்வியில் முடிந்த போன இன்றைய நிகழ்ச்சியின் சம்பவங்களை சுருக்கமாகப் பார்ப்போம். 
முப்பது நாட்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையில், போட்டியாளர்கள் “அரைக்கிணறு தாண்டிடாங்கன்னு சொல்வாங்க.. இவங்க மூன்றில் ஒரு பங்கு தாண்டிட்டாங்களா. இல்ல.. தங்கிட்டாங்களா’ என்கிற ஆதாரமான சந்தேகத்தை கமல் எழுப்பினார். ‘அன்புல முங்கணும்.. ஆனா சண்டைல தொங்கிக்கிட்டிருக்காங்க’ என்று பார்வையாளர்களில் ஒருவர் சொன்னதை கமல் வழிமொழிந்தார். ‘இவர்கள் எப்போது நண்பர்களாகிறார்கள், எப்போது பகைவர்களாகிறார்கள்’ என்பது புரியவில்லை” என்றார் கமல். (“நான் சினிமாவைச் சொல்லலை’ என்கிற நையாண்டி வேறு).
கமல்
இந்த வாரச் சம்பவங்களின் recap முடிந்த பிறகு, பார்வையாளர்களிடமிருந்து (பிக்பாஸிற்கு சம்பந்தமில்லாதவையும் சேர்த்து) சில கேள்விகள் வந்தன. ‘உங்க கவிதையும் அதை நீங்கள் உச்சரிக்கும் முறையும் எனக்குப் பிடிக்கும்” என்று ஒருவர் ஆரம்பித்தார். (பார்வையாளர்களையும் கமலே கூட்டிக் கொண்டு வந்து விடுகிறார் போலிருக்கிறது). 
‘எத்தனை சாதனை கதிரவனுக்கு! / குந்தியை கருவுறுத்தி கர்ணசிருஷ்டி செய்தது முதல்/ என் சோலார் வாட்ச்சுக்கு சாவி கொடுத்த வரை. (எண்ட்டர் அடிச்சா கவிதை!) சிறுவயதில் எழுதிய இந்தக் கவிதையை சுஜாதா போன்றவர்கள் பாராட்டியதால் கமல் தொடர்ந்து கவிதை எழுதுகிறாராம். 
‘இந்தியன் 2 எப்ப வரும்?” என்றொரு முக்கியமான கேள்வியை இன்னொரு பார்வையாளர் கேட்டார். (விட்டா.. மருதநாயகம் எப்ப வரும் –ன்ற நூற்றாண்டு கேள்வியையும் கேட்டு இம்சை பண்ணிட்டே இருப்பாங்க போலிருக்கு!). ‘Wild card entry’ எப்ப வரும்?” னு உண்மையாகவே ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் ஒரு  பார்வையாளர். (இது சார்ந்த எதிர்பார்ப்பு நமக்கே இருக்கிறது. அந்தளவிற்கான சலிப்பு நிகழ்ச்சியில்). ‘அடுத்த நிமிட ஆச்சரியங்கள்தானே இந்த நிகழ்ச்சியின் அடிப்படை. எப்ப வேணா வரும்! நானும் போட்டியாளர் கிட்ட இதை சொல்லி அவங்க ஏதாவது புரிஞ்சுக்கறாங்களான்னு பார்க்கறேன்’ என்றார் கமல். 
மக்கள்
‘பிக்பாஸ் மேடையை நீங்கள் அதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்கிறீர்களா?’ என்றொரு விவகாரமான கேள்வி வந்தது. (எதிர்க்கட்சிக்காரன் போலிருக்கிறது!). “பிக்பாஸ் என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார். மக்களோடு அளவளாவ நான் இந்த மேடையை பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்று வழக்கமான புராணத்தைப் படித்தார் கமல். ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளையும்’ கமல் உருக்கத்துடன் நினைவுகூர்ந்தார். (அவரைப் பற்றி தெரியாமல் பிறந்த தலைவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவோம்!).
இதைத் தொடர்ந்து 34-ம் நாளின் நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. ஒரே திரைப்படத்தின் பாடல்களை அடுத்தடுத்த நாட்களில் ஒலிபரப்புவது பிக்பாஸ் வீட்டின் வழக்கம் அல்ல. விதிவிலக்காக ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது. (இளையராஜாவின் தீவிரமான ரசிகர் அங்கே ஒருவர் இருக்கிறார் போலிருக்கிறது) ‘வதனவதன வடிவேலனே’ என்கிற ரகளையான பாடல் ஒலித்தது. 
“எதுக்காக பாலாஜியை உள்ளே போட்டே” என்று டேனியிடம் காலையிலேயே பஞ்சாயத்தை துவக்கி வைத்தார் வைஷ்ணவி. அந்தப் பகுதியின் தலைப்பு ‘நேர்மையாகவும் துணிச்சலாகவும் பதில் சொல்கிறவர்களைப் பற்றியது”. எனில் இந்த நோக்கில் பாலாஜி நேர்மையாகத்தானே பதில் சொன்னார்! என்பது வைஷ்ணவியும் ரம்யாவும் முன்வைக்கும் நியாயமான கேள்வி. ‘என் இஷ்டம். அதனால்தான்” என்று மழுப்பலாக, மொண்ணையான பதிலைத் தந்தார் டேனி. “தவறு என்று தெரிந்த பிறகும் புறம் பேசுவதை பாலாஜி தொடர்வது நேர்மையற்ற செயல்’ என்று அவர் கருதியிருக்கலாம். 
‘பாலாஜியின் தண்டனை முடிவடைந்ததாக பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது. (குற்றம் செய்த அரசியல்வாதிகள் சிறைக்குப் போகாமல் ஜாமீனிலேயே தப்பிப்பதை பிக்பாஸ் அரசியல் நையாண்டியாக உணர்த்த விரும்புகிறார் போலிருக்கிறது). “நித்யா don’t cryடா.. வெளியே வந்துட்டேன்’ என்று காமிராவின் முன்னால் சொல்லிய பாலாஜி ‘என்னது.. உள்ளேயே இருடா’வா என்று வேறு தொனியில் சொன்னது ரசிக்க வைத்தது. இது போன்ற சமயங்களில் பாலாஜி மிகவும் கவர்ந்து விடுகிறார். 
பாலாஜி

‘வாஸ்து’ சரியில்லாத கிச்சனில் அடுத்த பிரச்னை உருவெடுத்தது. ‘குடமிளகாயை’ இந்த வாக்கில் வெட்டினால் எளிது என்று டேனி தந்த யோசனையை ஏற்க வைஷ்ணவி தயாராக இல்லை. ‘என்னுடைய பாணியில்தான் சமையல் செய்ய முடியும். தொந்தரவு செய்யாதே’ என்பது அவரது மறுப்பாக இருந்தது. டேனி தன்னை ‘டார்க்கெட்’ செய்து கிண்டல் செய்கிறார் என்கிற எண்ணம் அவரது மனதில் அழுத்தமாக படிந்து விட்டதால் அவர் சொல்லும் அனைத்தையுமே எதிர்ப்பு மனநிலையில் பார்க்கும் உளவியல் பிரச்னை இது. 
“அவன் சொன்னது நல்ல யோசனைன்னா.. எடுத்துக்க வேண்டியதுதானே.. ஏன் ஆத்திரப்படறே?” என்று வைஷ்ணவியின் நெருக்கமான தோழியான ரம்யாவே இதைச் சுட்டிக் காட்டினார். “நம்ம கிட்ட அவன் அப்படில்லாம் நடந்துக்கறது இல்ல, பார்த்தியா” என்று ஜனனி, ரம்யாவிடம் சொன்னதில் வைஷ்ணவிக்கு முக்கியமான செய்தியுள்ளது. 
பிறகு இந்தப் பஞ்சாயத்தை டேனியிடம் வைஷ்ணவி மீண்டும் எடுத்துச் செல்ல, டேனி வெடித்த அந்தக் காட்சி சுவாரசியமானது. “அனந்த் சார்.. பொன்னம்பலம்.. சில குறைகளை என்னிடம் சுட்டிக் காட்டினாங்க.. திருத்திக்கிட்டேன்.. இதான் சாக்குன்னு ஒவ்வொருத்தவரா.. வந்து எதையாவது சொல்லிக்கிட்டே இருந்தா.. எப்படி.. நானும் இனிமே கேம் ஆடப்போறேன்.. என்ன வேணா பண்ணிக்கோங்க” என்று அவர் வெடித்தது நியாயமுள்ளதாகப் படுகிறது. ‘ஒரு பிரச்னையை அப்போதே பேசி கடந்து விடாமல், நிதானமாக அசைபோட்டு தொகுத்துக் கொண்டு’ வைஷ்ணவி பஞ்சாயத்துக்கு வருவது அவரை எரிச்சல்படுத்துகிறது. 
வைஷ்ணவி

இன்னொன்று, ஒரு விஷயத்தை சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்லி முடிக்கும் திறமை வைஷ்ணவியிடம் இல்லை. நாடகப்பாணியில் நீட்டி முழக்கி சொல்வது சமயங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. (டேனிக்கு வால்யூமை குறைக்கத் தெரியலைன்னு சொல்ற மாதிரி.. உங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தெரியலை’ என்று கமல் நையாண்டி செய்ததும் இதைத்தான்). 
“முதலில் யாஷிகா.. மஹத்’தான் என் நெருக்கமான பிரெண்ட்ஸ்ஸாக இருந்தாங்க.. இப்ப நீயும் என் க்ளோஸ் பிரெண்ட் ஆயிட்டே’ என்று டேனியிடம் உருகிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. 
**
“குறள் எல்லாம் படிச்சீங்க போல.. அதுல சிலர் ‘குறள்’ உங்களை படிச்சது –ன்னு நினைச்சீங்க.. இல்லையா..’ என்று நுட்பமான கிண்டலை வைத்தபடி ‘அகம் டிவி’க்குள் நுழைந்தார் கமல். (நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா.. பின்றாம்ப்பா..)
“எல்லாமே நடிக்கறாங்க’ன்னு ஒரு புகார் இருக்கு. ‘நான் இயல்பாகத்தானே இருக்கேன்.. இன்னமும் என்னதான் செய்யறது’ என்று இன்னொரு பிரிவும் இருக்கு’ விளக்குங்க என்றார் கமல். ‘பெரும்பாலோனோர் நடிக்கிறார்கள்’ என்கிற முதல் பிரிவில் பாலாஜி, சென்றாயன் போன்றவர்கள் இருக்கிறார்கள். ‘நாங்க. நாங்களாத்தான் இருக்கோம்’ என்கிற இன்னொரு பிரிவில் மும்தாஜ், ரம்யா போன்றவர்கள் இருக்கிறார்கள். எனவே அவரவர்களின் தரப்புகளை, காரணங்களை சொன்னார்கள். 
மும்தாஜ்
“சென்றாயன் வெகுளி-ன்றாங்க.. அப்படியே அவர் நடிக்கத் துவங்கி விட்டார்’ என்று உரிமையுடன் சென்றாயனை மேற்கோள் காட்டினார் பாலாஜி. ‘சொல்லப்பட்டதை மறந்து விடுவது.. விதண்டாவாதம் செய்வது’ போன்ற காரணங்கள் பொன்னம்பலத்தின் மீது சொல்லப்பட்டன. ‘சீரியஸான விஷயமா இருந்தா ஞாபகம் வெச்சுப்பேன்’ என்று விளக்கம் அளித்தார் பொன்னம்பலம். (இவருக்கு நினைவுப்படுத்தி பேசறதுக்குள்ள நான் எலிமினேட் ஆகி வெளிய போயிடுவேன்’ என்று ஜாலியாக கலாய்த்தார் பாலாஜி).
ஆக.. ‘சகிப்புத்தன்மையுடன் குடும்பமாக இயங்குவது, அதன் மீதான சவால்களை நேர்மறை உணர்வுகளுடன் கடப்பது’ போன்ற இந்த விளையாட்டின் அடிப்படைகளை பின்பற்றும் பக்குவம் இந்தப் போட்டியாளர்களில் பலரிடம் இல்லை. (ரம்யா, ரித்விகா, ஜனனி போன்றவர்கள் இந்த நோக்கில் சாத்தியமான எல்லைக்குள் ஒளிர்கிறார்கள்). 
சென்றாயனின் “மூக்குச்சளி’ பிரச்னையை ‘எம்.ஜி,ஆர்’ பாணியில் எளியவர்களுக்காக வாதாடும் பாணியில் கமல் எடுத்துச் சென்ற போது மற்றவர்கள் பாதுகாப்பாக அடங்கி விட்ட சூழலில் ‘அது சரியல்ல..” என்று உறுதியாக மறுத்த மும்தாஜின் நேர்மையும் துணிச்சலும் பாராட்டத்தக்கது. (அவருடைய அதீதமான சுத்தவுணர்வு ஒருபக்கம் சரியல்ல என்றாலும்). இதைப் போலவே ஐஸ்வர்யாவிடம் பொன்னம்பலம் சத்தம் போட்ட போது, தாய்ப்பறவை தன் குஞ்சை பாதுகாக்கும் வேகத்தில் மும்தாஜ் தலையிட்டது அற்புதமான காட்சி. ‘நான் பஞ்சாயத்து செய்ய முனையும் போது நான் சொல்வதைக் கேட்டு நட” என்றதும் பின்பு கலங்கிய ஐஸ்வர்யாவைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்னது.. போன்ற விஷயங்களில் மும்தாஜ் அதிகம் கவர்கிறார்

No comments:

Post a Comment

Followers

Post Bottom Ad

Pages