கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியல் ‘இளைய தளபதி’ - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, July 18, 2018

demo-image

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியல் ‘இளைய தளபதி’

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியல் ‘இளைய தளபதி’

‘இளைய தளபதி’ என்ற பெயரில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

.ece/alternates/FREE_700/



‘இளைய தளபதி’ என்ற பெயரில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ என்ற பிரமாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், ‘இளைய தளபதி’ என்ற சீரியலைத் தயாரித்திருக்கிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த சீரியல் வருகிற 28-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
சீரியலின் புரமோஷன் வீடியோக்களைப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட ‘பாகுபலி’ படத்தைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. அந்த அளவுக்குப் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர். சீரியலின் நாயகன் பெயரும் ‘மகேந்திரா’ என்று வைக்கப்பட்டுள்ளது. ‘பாகுபலி’ படத்தின் நாயகன் பிரபாஸின் பெயர் ‘மகேந்திர பாகுபலி’ என்பது குறிப்பிடத்தக்கது.
‘இளைய தளபதி’ என்பது நடிகர் விஜய்யின் பட்டமாகும். ‘மெர்சல்’ படத்தில் இருந்து அது ‘தளபதி’ என மாற்றப்பட்டுள்ளது.

Followers

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages