ஹாஸ்டல் வார்டனாக ரஜினிகாந்த் - My News Da

latast news

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, July 18, 2018

demo-image

ஹாஸ்டல் வார்டனாக ரஜினிகாந்த்

ஹாஸ்டல் வார்டனாக ரஜினிகாந்த்



கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவரும் படத்தில், ஹாஸ்டல் வார்டனாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
.ece/alternates/FREE_700/

‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ‘கபாலி’ மற்றும் ‘காலா’ என இரண்டு படங்களில் நரைத்த முடியுடன் வயதானவராக நடித்த ரஜினி, இந்தப் படத்தில் நரை எதுவும் இல்லாமல், அதேசமயம் கொஞ்சம் வயதானவராக நடிக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் ரஜினியின் மகன்களாக நடிக்க, சனந்த் ரெட்டி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.
இந்தப் படத்துக்காக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். முதற்கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் முடிவுற்ற நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு டேராடூனில் தொடங்கியுள்ளது. அதன்பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
ஊட்டி மற்றும் மதுரைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தக் கதையில், ஊட்டி சம்பந்தப்பட்டக் காட்சிகளை டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் படமாக்குகின்றனர். மதுரை சம்பந்தப்பட்டக் காட்சிகளை, சென்னை விமான நிலையத்துக்கு அருகிலுள்ள பின்னி மில்லில் படமாக்க இருக்கின்றனர்.
இதற்காக மதுரை செட் பின்னி மில்லில் தயாராகி வருகிறது. வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி, இதுவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர் சம்பந்தப்பட்டக் காட்சிகள், பின்னி மில்லில் படமாக்கப்பட உள்ளன. அவரும் ரஜினியும் சேர்ந்தாற்போல் நடிக்க இருக்கும் சில காட்சிகளையும் அங்குதான் படமாக்க இருக்கின்றனர்.
அத்துடன், பாடல் காட்சிகளுக்கான செட், சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் தயாராகி வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘காலா’ படத்தின் செட்டும் அங்குதான் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதல்பாதியில், ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் பாபி சிம்ஹா மூன்றாமாண்டும், சனந்த் ரெட்டி முதலாமாண்டும் படிக்கின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் கல்லூரி ஹாஸ்டலின் வார்டனாக ரஜினிகாந்த் வேலை பார்க்கிறார். அவர் ஏன் அப்படி வேலை பார்க்கிறார் என்பது ஃப்ளாஷ்பேக்காக இரண்டாம் பாதியில் சொல்லப்படுகிறது.

Followers

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages